ETV Bharat / city

அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்படும் தமிழ் திருநங்கைகளின் ஓவியங்கள்! - திருநங்கை கல்கி சுப்பிரமணியம்

'திருநங்கைகளின் அடையாளத்தின் பெருமை' எனும் தலைப்பில் திருநங்கை கல்கி சுப்பிரமணியத்தின் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

author img

By

Published : Oct 27, 2021, 10:50 PM IST

கோயம்புத்தூர்: அமெரிக்காவில் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் வரை ஓவியக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர், கவிஞர், ஓவியர் என பன்முகத்தன்மை கொண்ட கல்கி சுப்பிரமணியத்திடம் பயிற்சி மேற்கொண்ட ஏழு திருநங்கைகள், ஒரு திருநம்பி ஆகியோரின் ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளது.

நான்காண்டுகள் பயிற்சி

இதுகுறித்து, கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கல்கி சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறேன். திருநர்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் திருநங்கைகளின் படைப்பாற்றலை கண்டறிந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறேன். எனது மாணவர்களால் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பல்வேறு நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Kalki Subramaniam
ஓவியங்களுடன் கல்கி சுப்பிரமணியம் (வலது புறம் இருப்பவர்)

கலைக்கூடம் வேண்டும்

தற்போது அவர்களின் ஓவியங்கள், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த ஓவியங்கள் 'திருநங்கைகளின் அடையாளத்தின் பெருமை' என்ற தலைப்பில் வரையப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு திருநங்கைகள் மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே நேரத்தில், இந்திய அளவில் பொள்ளாச்சி மாவட்டம் தென்னை நார் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற பகுதியாக விளங்குகிறது. இங்கு, பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே திருநங்கைகளின் கலைத்திறமையை ஊக்குவிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தென்னை நார் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்க கலைக்கூடம் அமைத்து தர தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மங்கள வாத்தியங்கள் முழங்க தடபுடலாக நடந்த திருநங்கை ரியா திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.