கோவை: வால்பாறைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் சோலையார் அணை வேகமாக நிரம்பி, அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இந்த அணையானது, 2ஆவது முறையாக தனது முழுக் கொள்ளளவான 165 அடியை எட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அணையின் நலன் கருதி இன்று (ஜூலை 14) மூன்று மதகுகள் வழியாக 4500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனிடையே தற்போது நீர்வரத்து 8000 கன அடியாகவும்; நீர் வெளியேற்றம் 9520 கன அடியாகவும் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நீர் இருப்பு உயரம் 163.24 என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அணையிலிருந்து நீர் வெளியேறுவதைக் காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த அணை ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட இரண்டாவது பெரிய அணை என்றும் மிகவும் பிரசித்திபெற்ற அணையாகும் திகழ்கிறது. இது கோவையில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஒகேன்னக்கல்லில் ஆர்ப்பரித்து ஓடும் காவிரி...