ETV Bharat / city

கோவையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

author img

By

Published : Sep 19, 2020, 10:49 PM IST

கோவை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (போசன்) சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Nutrition Awareness Art Show in Coimbatore

கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சிங்காநல்லூர் கிளை சார்பில் பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள் என்னென்ன என்று கூறும் வகையில், "அனைவருக்கும் ஊட்டச்சத்து அதுவே நம் வாழ்வின் சொத்து" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், கலந்துகொண்ட குழந்தைகள் கேரட், வெண்டை போன்ற காய்கறி வகைகள், முருங்கை, பசலை போன்ற கீரை வகைகளை மாலையாக அணிந்து விழிப்புணர்வு நடனமாடினர்.

அதேசமயம் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளில் உள்ள தின்பண்டங்களில் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், தேங்காய் பருப்பி போன்ற சத்தான தின்பண்டங்களை வாங்கி உட்கொள்ள வலியுறுத்தும் வகையில் பெட்டிக்கடை மாதிரி தள்ளுவண்டி ஒன்றை வடிவமைத்திருந்தனர்.

அதில், உடலுக்கு நன்மை பயக்கும் தின்பண்டங்கள், புத்தகங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.