கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார். இதையொட்டி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மகேந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மகேந்திரன், “சட்டப்பேரவைத் தொகுதி வாரியான தேர்தல் அறிக்கை இந்த வார கடைசியில் வெளியிட உள்ளோம். கொங்கு மண்டலத்தில் மநீமவிற்குச் சிறப்பான வரவேற்பு உள்ளது.
கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் மக்களிடம் தங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. மாறி மாறி மக்கள் வாக்களித்திருந்தாலும், யாரும் எதுவும் செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து மாற்றத்திற்கான வேட்பாளராக இருப்பேன் எனவும், அதிமுகவின் இலவசத் திட்டங்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்