கோயம்பத்தூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான கமல் ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி நாளை (மார்ச் 15) கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதற்காக நாளை 12 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வரும் அவர் மதியம் 1:30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் ராஜவீதி தேர்முட்டி பகுதியில் "மண், மொழி, மக்கள் காக்க மாபெரும் பொதுக்கூட்டம்" என்ற நிகழ்வில் கலந்துகொண்டு பரப்புரையை மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல் 2021: பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ