ETV Bharat / city

'கரோனா காலத்தில் சாதிகளைக் கடந்து கைகோக்க வேண்டும்' - மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

கரோனா காலத்தில் சாதிகளைக் கடந்து அனைவரும் கைகோக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார்.

MNM chief Kamalhassan participates in corona vaccination camp

author img

By

Published : Aug 3, 2021, 1:55 PM IST

கோயம்புத்தூர்: ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் பார்மஸி சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள், மாற்றுத்திறனாளிகள், வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்கள் ஆகிய 100 பேருக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் கமல் ஹாசன் கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார். இதில் பொதுமக்களிடையே பேசிய அவர், "கரோனா காலத்தில் எங்களுக்கு முன்னோடியாகப் பலர் உதவி வருகின்றனர்.

உதவி செய்யும் மனம் கரோனாவைவிட மக்கள் பலரிடம் பரவி உள்ளது. இது மனிதன் மனிதனுக்குச் செய்யும் உதவியே தவிர இந்தியன் இந்தியனுக்குச் செய்யும் உதவியோ, தமிழன் தமிழனுக்குச் செய்யும் உதவியோ அல்ல.

கமல் ஹாசன்

இக்காலத்தில் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவருமே ஒன்றிணைய வேண்டும். சாதிகளைக் கடந்து இதுபோன்ற நேரத்தில் மக்கள் அனைவரும் கைகோக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மறக்காமல் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு தள்ளுவண்டியை அன்பளிப்பாக அளித்தார்.

இதையும் படிங்க: இபிஎஸ்க்கு அழைப்புவிடுத்தும் வரவில்லை- அமைச்சர் துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.