ETV Bharat / city

கோவையில் அனைத்து வார்டுகளிலும் வெற்றிபெறுவோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோயம்புத்தூரில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. முழு வெற்றி பெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
author img

By

Published : Feb 6, 2022, 9:03 AM IST

கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்ற மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று வெறும் எட்டு மாதங்களில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட முதலமைச்சர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவரது செயல்பாடுகளை அனைத்து தரப்பினருமே பாராட்டுகின்றனர். ஆகவே, தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் திமுக மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள்.

கோயம்புத்தூரை பொருத்தவரை 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சி மற்றும் 33 பேரூராட்சிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு வெற்றி பெறுவார்கள்.

காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் மூன்று லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோயம்புத்தூரில் நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தேர்தலில் வாய்ப்பு இல்லையென்றால், அரசுப் பொறுப்பு- அமைச்சர் செந்தில்பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.