கோயம்புத்தூர்: கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 1195 மாணவ,மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வினா வங்கி புத்தகங்கள் மற்றும் 407 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தவிரவும், மக்களுக்கு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 22 ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வினா வங்கி புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து 180 மதிப்பெண்கள் வந்து விடுகிறது என்று என்னிடம் மாணவ மாணவிகள் கூறி மகிழ்ந்துள்ளனர்.
நாளை (ஜன.22) கோவைக்கு வருகை தரவுள்ள முதலமைச்சர், அனைத்து தொழில் முனைவோர்களை சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து கோவையில் தேர்தல் பரப்புரை தொடங்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் புதுவை அமைச்சர்கள்!