திருப்பூர்: மாவட்ட ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், பிஆர் நடராஜன், சண்முகசுந்தரம், கணேசமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் வினித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், "திருப்பூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் ஒன்றிய அரசு சார்பில் நடந்து வரும் பணிகள் குறித்த கண்காணிப்பு குழு (திசா) கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
ஒன்றிய அரசு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது, எவற்றை செயல்படுத்தி உள்ளது என்பது குறித்த விபரங்களை மக்கள் பார்வையில் வைக்க அறிந்துகொள்ள தகவல் பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- நியாயவிலை கடைகளில் அளவீடுகளை முறைப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக இயற்கை சீற்றத்தால் சேதமடையும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.
- பிரஸ் கவுன்சில் அமைப்பது தொடர்பான நீதிபதியின் தீர்ப்பு குறித்த முழு சாராம்சமும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. தீர்ப்பு குறித்த முழு விவரங்களும் பெறப்பட்ட பின்னர் அதுகுறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். பின்னர் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும்.