ETV Bharat / city

கரோனா ஊரடங்கால் தொழிலில் நஷ்டம் - மகன் பிறந்தநாளில் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்! - கோவை தற்போதைய செய்தி

கோவை: கரோனா ஊரடங்கால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கோவையை சேர்ந்த கார் பந்தய வீரரும், தொழிலதிபருமான விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டார்.

Industrialist commits suicide on his son's birthday

author img

By

Published : Jul 30, 2020, 3:34 PM IST

கோவை நஞ்சுண்டாபுரம் பார்சன் அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவர் கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் சக்தி ஸ்பின்னிங் மில் என்ற நூற்பாலை நடத்திவந்தார்.

கார் பந்தயங்களில் ஆர்வமாக இருந்த இவர், நரேன் கார்த்திகேயேன், நடிகர் அஜீத் உள்ளிட்ட பிரபலங்களின் ரேஸிங் கார்களை டியூன் செய்து அளிக்கும் வேலையையும் செய்துவந்தார். மேலும், இந்தியாவில் நடைபெற்ற சில கார் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறார்.

இதனிடையே கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதனால் கடந்த சில நாள்களாகவே விஜயகுமார் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி தனது மகனின் பிறந்தநாளன்று கருமத்தம்பட்டியிலுள்ள தனது ஸ்பின்னிங் மில்லில் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து அங்கு வேலை பார்த்த மேலாளர் எத்திராஜ் கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட விஜயகுமாரின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ’பணம் தரல உன்னை கொன்றுவேன்’ - மருந்து கடை உரிமையாளரை மிரட்டும் ரவுடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.