கோயம்புத்தூர்: கணபதியைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர், நான்கு நாள்களுக்கு முன்பு அதேபகுதியிலுள்ள கடையில், பிரபல தனியார் நிறுவனத்தின் பெயர்கொண்ட ரஸ்க் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.
அதனை சாப்பிடுவதற்காகப் பிரித்த போது, பல்லி(lizard inside sealed Packet) இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தார்கள் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பிரபல நிறுவனத்தின் ரஸ்க்கில், இது போன்று பல்லி இருப்பது கவனக்குறைவால் ஏற்பட்டதாகவும், இது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் 1.22 கிலோ தங்கம் பறிமுதல்