கோவை சிவானந்தா காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன் மண்டல தலைவர் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் சிறையில் உயிரிழந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. காவல்துறையினர் அவர்கள் இருவரையும் விசாரணை என்று அழைத்துச் சென்றுபோய் அவர்களை கடுமையாகத் தாக்கியதால்தான் மரணம் ஏற்பட்டிருக்கக்கூடும். மனிதாபிமானமற்ற அந்த காவல்துறையினரின் நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.
எனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். தந்தை, மகனை தாக்கிய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
உடற்கூறு ஆய்வு செய்யும்பொழுது அரசு மருத்துவர்கள் உடன் வணிக தரப்பினர் இருவரும் இருக்கவேண்டும். அவர்கள் முன்னிலையில் உடல்கூறாய்வை வீடியோ பதிவு நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தந்தை-மகன் மரணம்: ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடையடைப்பு