கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் தெற்குச் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்வதற்கு டோக்கன் வழங்கிவருவதாகக் கூறி, அதே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டு பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் அத்தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல் ஹாசன் கோயம்புத்தூர் மத்திய மண்டல அலுவலகத்தில் தெற்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியத்தைச் சந்தித்து பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், டோக்கன்கள் வழங்கிய பாஜக ஆதரவாளர்களின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: உதயநிதி சட்டையில் உதயசூரியன் - தகுதி நீக்க அதிமுக கோரிக்கை!