கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பாஜக அலுவலகத்தில், நந்தகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மூன்று மாதங்களாகச் சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்துவருகிறார். கோவை மாவட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசுக்கு கொண்டுசேர்க்கிறார்.
கோவைக்கு கமல் ஹாசன் மூன்று மாதத்திற்கு முன்பு படப்பிடிப்புக்காக வந்தார். அதனைத்தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன்பு வந்தார். மக்கள் பணியில் ஈடுபட வேண்டுமென்றால், அவர் இங்கேயே ஐந்தாண்டுகள் தங்கி மக்களுக்குப் பணியாற்ற வேண்டும்.
ஆனால் அதற்கவர் தயாராக இல்லை. குறிப்பிட்டுச் சொன்னால் அவர் தற்போது வருகை தந்தது என்டர்டெய்ன்மென்டுக்காகவே.
நட்சத்திர விடுதியில் தங்கி ஆலோசனை செய்கிறார். அடிப்படையாக மக்களுடன் கலந்துரையாடுவதற்குத் தயாராக இல்லை. அதுதான் அவருடைய ஸ்டைல். மேலும், திமுகவால் கோவை மாவட்டம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுவருகிறது. அடிப்படை உரிமைகளைக்கூட போராடித்தான் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மலேசிய அமைச்சருடன் உரையாடல் - அரசுகளுக்கு பரிந்துரைகள் வழங்குவதாக கமல் உறுதி!