கோவை மாவட்டம் சின்னாம்பதி என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியா. அக்கிராமத்திலே முதல் பட்டதாரி பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கரோனா ஊரடங்கு காலத்தில் சிறுவர், சிறுமியினருக்கு காலையும் மாலையும் பள்ளி வகுப்புகள் எடுத்தார். இதையறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் சந்தியாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சந்தியாவிற்கு வாழ்த்துகள்
அதனைத் தொடர்ந்து சந்தியா 'கல்பனா சாவ்லா' விருது பெற பரிந்துரைக்கப்படுவார் எனவும் தெரிவித்தார். இந்த செய்தி அக்கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அனைவரும் சந்தியாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். மேலும், சின்னாம்பதி கிராமம் உள்ள மாவுத்தம்பதி ஊராட்சியின் ஊராட்சித் தலைவர் கோமதி செந்தில்குமார், சந்தியாவை நேரில் சந்தித்து பாடம் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சந்தியா கூறியபோது, "'கல்பனா சாவ்லா' விருதுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தது, தனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளது" என கூறினார்.