ETV Bharat / city

எஸ்.பி.வேலுமணி உதவியாளரின் சகோதரர் இல்லத்தில் ரெய்டு - நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளரான சந்தோஷ் என்பவரின் சகோதரர் வசந்தகுமார் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் வீட்டில் ரெய்டு

author img

By

Published : Jul 10, 2022, 1:34 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது.

நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் இல்லம், சந்திரசேகரின் தம்பி செந்தில் பிரபு இல்லம், சந்திரசேகரின் பெற்றோர் வீடு, ஆலயம் டிரஸ்ட், கே.சி.பி நிறுவன செயல் இயக்குநர் கார்த்திகேயன் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை முடிந்து இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் உதவியாளரான சந்தோஷ் சகோதரர் வசந்தகுமார் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கே.சி.பி இன்ஜினியரிங் அலுவலகம், கே.சி.பி நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் இல்லம் மற்றும் வசந்தகுமார் இல்லம் ஆகிய மூன்று இடங்களில் வருமான வரித்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. கே.சி.பி நிறுவனத்தில் 5 வது நாள், சந்திரபிரகாஷ் இல்லத்தி்ல் 3 வது நாள், வசந்த் குமார் வீட்டில் நேற்று இரவு முதல் சோதனை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வசந்தகுமாரை மட்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கோவை கேசிபி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.