ETV Bharat / city

இரிடியம் மோசடி - காவல் துறை விசாரணை - இரிடியம் விற்பனை

கோயம்புத்தூரில் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாக கூறி, நூதன முறையில் பணம் மோசடி செய்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ரிடியம்  மோசடி
ரிடியம் மோசடி
author img

By

Published : Oct 22, 2021, 6:27 AM IST

Updated : Oct 22, 2021, 6:57 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சாலை ஒத்தக்கால்மண்டபம் பகுதியிலுள்ள வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல், கேரளாவைச் சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டி வருவதாக செட்டிபாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வீட்டில் சோதனையிட்ட போது அங்கு கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த 8 பேரிடமும் காவல் துறையினர், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், இரிடியம், ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்கு கூடியிருந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த போஜராஜ், கோவையைச் சேர்ந்த முருகேசன், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு என்பது தெரியவந்தது.

மோசடி கும்பல்

இவர்கள் கேரளாவிலுள்ள ரைஸ் புல்லிங் மோசடி கும்பலைச் சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை, குடும்ப பிரச்சினைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

தற்போது கேரளாவைச் சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அனுகி தங்களிடம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம், ரைஸ் புல்லிங் இருப்பதாக கூறிய இந்த கும்பல் பல தவணைகளாக 27 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளனர்.

ஆனால், அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்த கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்து வந்துள்ளனர். சாதாரண வெங்கல செம்பை பெட்டிக்கு வைத்து, பெட்டிக்குள் மிளகாய் ஸ்ப்ரே அடித்து வைத்துக்கொள்கின்றனர்.

இரிடியம் மோசடி

பின்னர் வாங்க வருவோரிடம் செய்வோரிடம் கவச உடைகளை அணிந்துக் கொண்டு வெளியே எடுக்கும்போது அந்த இரிடியத்திற்கு சக்தி உள்ளது போல காட்டி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கும்பலில் 6 பேரை பிடித்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 99.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர், இரண்டு கார்களை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கேரளாவைச் சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். இது போன்று யாரெனும் இரிடியம் உள்ளது விலை உயர்ந்த பொருள்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தால் மக்கள் நம்பி விட வேண்டாம் என காவல் துறையின்ர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மூதாட்டியை நூதன முறையில் திசை திருப்பி 10 சவரன் நகைகள் கொள்ளை

Last Updated : Oct 22, 2021, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.