ETV Bharat / city

வன ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டும் வனச்சரகர்: வைரலாகும் ஆடியோ!

கோவையில் வனச்சரகர் ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும், தற்காலிக ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, துறை ரீதியிலான விசாரணை நடைபெற்றுவருவதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

forester
forester
author img

By

Published : Nov 17, 2020, 9:47 PM IST

Updated : Nov 17, 2020, 10:11 PM IST

கோயம்புத்தூர்: கோவை வனக் கோட்டத்தில் வனச்சரகராகப் பணியாற்றிவருபவர் சிவா. இவர் யானைகளை விரட்டும் சிறப்புக் குழுவான ராபிட் ரெஸ்பான்ஸ் (rapid response team) குழுவில் பணிபுரியும் ஒப்பந்த வனஊழியர் ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியது போன்ற ஆடியோ உரையாடல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த ஆடியோவில், வனத்துறைக்குச் சொந்தமான ஜீப் ஒன்று பஞ்சர் ஆனது தொடர்பாக தற்காலிக வன ஊழியர் ஒருவர் விளக்கம் அளிப்பது போலவும், அதற்கு வன சரகர் சிவா ஜீப் என்ன ஆனது என கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியும், யாரும் பணியில் இருக்க மாட்டீர்கள் என மிரட்டுவது போன்று உரையாடல் பதிவு இடம் பெற்றுள்ளது.

இந்த ஆடியோ பதிவு முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இதுதொடர்பாக வனச்சரகர் சிவா மீது, மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆடியோ உரையாடல் பதிவு குறித்து துறை ரீதியில் விசாரணை நடைபெற்றுவருவதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் விசாரித்துவருவதாகவும், விசாரணை முடிவிலேயே உண்மைத்தன்மைத் தெரியவரும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வளர்ச்சிப் பணிகளுக்குத் தடை: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

Last Updated : Nov 17, 2020, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.