ETV Bharat / city

மின்மினிப் பூச்சிகளின் வருகையால் ஒளிமயமான காலநிலை - Climate-sensitive fireflies

மின்மினிப் பூச்சிகள்.. ஒளியை வழங்குவதில் நட்சத்திரங்களோடு போட்டி போடும் இவைகள் அவ்வப்போது பல கவிஞர்களின் வார்த்தைகளில் ஒளிர்ந்து நம்மை வருடுகின்றன. இந்த "மின்மினிப் பூச்சிகள்" எண்ண முடியாத அளவில் ஒளி வெள்ளத்தால் திருவிழாக் கோலம் காணும் இடம், கரும் பசுமைக் கானகமான நெல்லியாம்பதி மலை பகுதி. இது குறித்த சிறப்பு தொகுப்பு.

மின்மினிபூச்சிகளின் வருகையால் ஒளிமையமான காலநிலை

author img

By

Published : Apr 27, 2020, 6:07 PM IST

Updated : Apr 27, 2020, 7:16 PM IST

ஏறக்குறைய 1500 கிலோ மீட்டர்கள் நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் இருக்கும் ஒரே இடைவெளி பாலக்காட்டுக் கணவாய். இந்த கணவாய் பகுதியில் இரவு பகல் பாராது வெளிச்சமாக இருக்கும் மலைப்பகுதி நெல்லியாம்பதி. உலக யுனஸ்கோ அமைப்பால் Bio Diversity ECO - SPOT என அறிவிக்கப்பட்டுள்ள பூமியின் மிக அபூர்வமான 100 இடங்களில் நெல்லியாம்பதியும் ஒன்று.

பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டுகள். மனிதன் தோன்றி சுமார் 45 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றதாக, அறிவியல் சொல்கிறது. மனிதனைவிட கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றிய அமீபா, எறும்பு, மீன், பல்லி, பறவைகள் என அனைத்தும் நிலை நிற்கின்றன. இந்நிலையில் இயற்கை, மனிதனுக்கு கரோனா வாயிலாக ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை தந்துள்ளது.

மின்மினிப்பூச்சிகளின் ஒளி வெள்ளத்தால் திருவிழா கோலம் காணும் நெல்லியம்பதி - சிறப்பு தொகுப்பு

கரோனாவால் மனித இனம் மட்டுமே முடங்கிக் கிடக்கிறது. ஆனால் பூமியின் அத்தனை உயிரினங்களும், இயற்கையும் எந்தத் தடையுமில்லாமல் இன்னும் இன்னும் பசுமையாக, மென்மையாக இயங்கிக் கொண்டுதானிருக்கிறது. நெல்லியம்பதி மலைப்பகுதியில் வாழும் மின்மினிப் பூச்சிகள், பாலக்காட்டுக் கணவாய் - கோயம்புத்தூர் நிலப்பரப்பின் காலநிலைகளைத் தீர்மானிப்பவை. இந்த மின்மினிப் பூச்சிகளின் வருகை ஏப்ரல்- மே மாதங்களில் வெயிலும் மழையும் காற்றும் மிகச் சிறப்பாக உள்ளது என்பதை வெளிகாட்டுகிறது. இதன் அடையாளம்தான் ஒரு வாரத்துக்கு முன்பு மழையால் நனைந்த அப்பகுதி இப்போது வழக்கம்போல மின்மினிப் பூச்சிகளால் ஒளி பெற்று வருகிறது.

தாய்வீட்டிற்கு வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகள்...பார்க்க மிஸ் பண்ணாதீங்க!

இது குறித்து பூகம்ப ஆராய்ச்சியாளரும், இயற்கை ஆர்வலருமான சரவணன் கூறுகையில், "தேனீக்கள் அத்தனையும் இல்லாமல் போனால் அதற்கடுத்த நான்காண்டுகளில் மனித இனம் மொத்தமும் இல்லாமல் போகும் என்று தனது கண்டுபிடிப்பைக் கூறினார் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின். இப்படி ஒவ்வொரு உயிரினத்துக்கும் பூமியின் தனித்துவத்தில் தங்களுக்கென்று ஒரு மிக மிக முக்கியமான பங்குண்டு. கேரள மாநிலம் பாலக்காடு மாநிலத்தில் மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லியம்பதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான மின்மினிப் பூச்சிகளை காணமுடியும்.

பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணன்
பூகம்ப ஆராய்ச்சியாளர் சரவணன்

மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அந்த ஆண்டு நல்ல மழை பெய்து காடு வளம் பெறும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஒவ்வொரு ஆண்டும் இந்த மின்மினிப் பூச்சிகளை பார்த்து ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். காற்றின் சூழலை வெளிப்படுத்தும் இந்த மின்மினிப் பூச்சிகள் கேரள மாநிலத்தை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கோவை மாவட்ட பகுதிகளில் காலநிலை மாற்றத்தையும் வெளிப்படுத்தும்" என்று தெரிவித்தார்

கரும் பசுமை கானகத்தில் ஒளியை தருவதில் நட்சத்திரங்களோடு போட்டியிடும் மின்மினிப்பூச்சிகள்

வாழ்வில் வெளிச்சம் வெற்றியின் ரகசியம். ஆனால் இந்த மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம் பூமி உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம். இது தொடர வேண்டுமெனில் இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல... மற்ற உயிரினங்களுக்குமானது என்பதை நாம் உணர வேண்டும். வாழ்வோம். வாழ விடுவோம்.

இதையும் படிங்க: குரங்குகளுக்காக குரல் கொடுப்போம்...

Last Updated : Apr 27, 2020, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.