கோவை சிறுமுகையில் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று உடல்நிலை குன்றிய நிலையில் சோர்வடைந்து நின்றிருந்தது.
இது குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்த வன அலுவலர் வெங்கடேஷ், கால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர் சோர்வாக நின்றிருந்த யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் யானைக்கு சத்தான உணவு பொருள்கள், மருத்துவப் பொருள்கள் கொடுத்து அதன் உடல் நிலையை சரி செய்தனர்.
அதைத் தொடர்ந்து யானை சற்று அசைந்தது. அதன்பின் மெதுவாக மருத்துவர், வனத்துறையினர் யானையை பத்திரமாக கொண்டுச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனர்.