ETV Bharat / city

அரியவகை நோயால் அவதிப்படும் குழந்தை: உதவிக்கரம் வேண்டும் பெற்றோர்! - உதவிக்கரம் வேண்டி பெற்றோர்

கோவை: அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தைக்கு உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர் பெற்றோர்.

அரியவகை நோயால் அவதிப்படும் குழந்தை: உதவிக்கரம் வேண்டி பெற்றோர்!

author img

By

Published : Mar 2, 2021, 5:23 PM IST

கோயம்புத்தூர் போத்தனூர் அம்மன்நகர் மூன்றாவது வீதியைச் சேர்ந்த தம்பதியினர் அப்துல்லா-ஆயிஷா. அப்துல்லா அப்பகுதியில் பால் பொருள்கள் விற்பனை செய்துவருகிறார். இவரின் எட்டு மாத பெண் குழந்தை ஸீஹா ஜைனப்.

இந்நிலையில் இந்தக் குழந்தை மரபணு பாதிப்பினால் ஏற்படும் அரிய வகையான எஸ்.எம்.ஏ. என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தை இன்னும் ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்கும்.

குழந்தையைக் காப்பாற்ற குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாயாகும்.

அமெரிக்காவிலிருந்து ஊசி மருந்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும். குழந்தையைக் காப்பாற்ற இந்த ஊசியை போட்டாக வேண்டிய கட்டாயத்தில், இவ்வளவு பெரிய தொகையை எப்படி சேர்ப்பது எனத் தெரியாமல் பெற்றோர் தவித்துவருகின்றனர். மேலும், அவர்களுக்கு யாராவது உதவ வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.

அரியவகை நோயால் அவதிப்படும் குழந்தை: உதவிக்கரம் வேண்டி பெற்றோர்!
அரியவகை நோயால் அவதிப்படும் குழந்தை: உதவிக்கரம் வேண்டி பெற்றோர்!

தொடர்புக்கு.. அப்துல்லா (தந்தை) 9994054325

இதையும் படிங்க...டிஆர்பி மோசடி; பார்த தாஸ் குப்தாவுக்கு பிணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.