ETV Bharat / city

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டி சென்ற விவசாயிகள் - தக்காளி மார்கெட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் தக்காளிக்கு உரிய விலை இல்லாததால், விவசாயிகள் கூடை கூடையாக தக்காளியை குப்பையில் கொட்டி சென்றனர்.

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டி சென்ற விவசாயிகள்

author img

By

Published : Jul 18, 2022, 3:01 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது கோவை மாவட்டம் ஆகும். குறிப்பாக பொள்ளாச்சி கிணத்துக்கடவு மார்க்கெட்டில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

சில மாதங்களாக தக்காளி 15 கிலோ அளவு கொண்ட ஒரு பெட்டி ரூபாய் ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், இன்று ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கு கீழ் சென்றது. மேலும் இன்று கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வராததால் 50 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையாகாமல் அப்படியே கிடப்பில் கிடந்தது.

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டி சென்ற விவசாயிகள்

இதனால் கவலையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளியை குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர். மேலும் அவர்கள் கூறியதாவது,ஒரு ஏக்கர் தக்காளி நடவு செய்வதற்கு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

சரியான விலைக்கு தக்காளி விற்பனை ஆகாததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கழிவு நீரில் கீரையை கழுவும் வியாபாரி... கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.