ETV Bharat / city

பதவியை காப்பாற்றிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி - எம்பி கனிமொழி விமர்சனம்

author img

By

Published : Dec 10, 2020, 10:12 PM IST

கோயம்புத்தூர்: முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேளாண் திருத்த சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.

எம்பி கனிமொழி
MP kanimozhi

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி எப்போது வருமென மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். நொய்யல் ஆறு மிகவும் மாசுபட்டுள்ளது, நொய்யல் புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் என்ன பணிகள் நடைபெறுகிறது என யாருக்கும் தெரியவில்லை.

குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதிமுக ஆட்சி திறமையில்லாத ஆட்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அதிமுகவினருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளனர். தேவையற்ற தனிப்பட்ட விமர்சனங்கள் ஆரோக்கியமானது அல்ல. அதனை தொடக்கி வைத்தது அதிமுக தான்.

பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேளாண் திருத்த சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். வேளாண்மை திருத்தச் சட்டங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று. வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருவது பற்றி ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்.

கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத நிலையில், அவர் குறித்து கருத்து தெரிவிக்க தேவையில்லை, அழகிரி கட்சி ஆரம்பிப்பது குறித்து கேள்விக்கு, பதில் அளித்த அவர், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சர்வதேச மனித உரிமைகள் தினம்: சமத்துவ உலகை கட்டியெழுப்புவோம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.