கோவை பந்தயசாலை பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக சீர்மிகு நகரம் பணிகள் நடைபெற்றுவருகின்றன. புதிய நடைபாதை, விளையாட்டு இடங்கள் ஆகியவை அங்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தச் சீர்மிகு நகரம் பணிகளுக்கென அப்பகுதியில் சாலை விரிவாக்கம், சாலைகள் புதுப்பிக்கப்படுவதால் அங்குள்ள மரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதனைச் சமூக ஆர்வலர்கள் சிலரும் விமர்சித்துவந்தனர்.
அதுமட்டுமின்றி பந்தயசாலை பகுதியில் இந்தப் பணிகள் சற்று மெதுவாக நடக்கிறது என்றும் இதனால் அபகுதியில் வாகனங்கள் பயணிக்க தாமதமாகிறது என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் இந்தப் பணிகள் எந்த நிலையில் இருக்கின்றன, பணிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்று கோவை சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.