கோயம்புத்தூர் மாவட்ட தேமுதிக அவைத்தலைவராக பதவி வகிப்பவர் சின்னசேட். இவர் குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். இவரது கார் வழக்கம் போல் நேற்றிரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தது.
இன்று காலை காரை எடுக்க சென்ற போது, முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தர்மபுரியில் வேளாண் நிலத்தில் பற்றியெரிந்த தீ!