ETV Bharat / city

புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்ட யானையை தடுத்து நிறுத்திய தம்பதி!

author img

By

Published : Feb 7, 2021, 3:04 PM IST

கோயம்புத்தூர்: பேரூர் கோயில் யானையை மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமிற்கு அழைத்துச் சென்றபோது தம்பதி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Elephant Refreshment Camp
யானையை தடுத்து நிறுத்திய தம்பதி

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்த முகாமிற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்படுகின்றன.

இந்நிலையில் கோயம்புத்தூர் பேரூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோயில் யானையான கல்யாணியை இன்று(பிப்.7) காலை 5 மணி அளவில் தயார் செய்து மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமிற்கு அழைத்துச் செல்ல தயாரானபோது அங்கு வந்த ஞானவேல்-சுகந்தி பிரியா தம்பதி யானையை அழைத்து செல்லும் லாரியை மறித்தனர்.

யானையை தடுத்து நிறுத்திய தம்பதி

யானையின் பாகன், யானைக்கு தொல்லை கொடுப்பதாகவும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முகாமிற்கு அழைத்து சென்றால் அங்கு யானையை சரிவர கவனிக்க மாட்டார்கள் என்றும், பாகன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை. கல்யாணி யானையின் பாகனை மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர். காவல் துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதனை தொடர்ந்து யானை அழைத்து செல்லப்பட்டது.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளரின் வாக்கி டாக்கியை திருடிய இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.