ETV Bharat / city

கோவை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!- 28 லட்சம் பறிமுதல்

கோவை போக்குவரத்து துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!- 28 லட்சம் பறிமுதல்
கோவை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!- 28 லட்சம் பறிமுதல்
author img

By

Published : Apr 24, 2022, 1:17 PM IST

கோயம்புத்தூர்: கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோவை போக்குவரத்துத் துறை இணை ஆணையர் உமாசக்தியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையிலான விசாரணையில் 28,35,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், உமாசக்தி கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து மாதம் தோறும் பணம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், ஓய்வு பெற்ற உதவியாளர் செல்வராஜ் என்பவர் உதவியுடன் இதனைச் செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்த நிலையில் கோவை சரகத்தில் 2 பேருந்துகளை ஆய்வு செய்ததாகத் தெரிவித்தனர். அவற்றைப் பறிமுதல் செய்து இது குறித்து இன்று சோதனை மற்றும் விசாரணை நடத்தியதில் 28 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை போக்குவரத்துத் துறை இணை ஆணையர்
கோவை போக்குவரத்துத் துறை இணை ஆணையர்

இதையும் படிங்க:கை கழுவச் செல்வதாக கம்பி நீட்டியவரை கைது செய்த காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.