ETV Bharat / city

சாலை விபத்துக்கு காரணமான குடிமகன்கள் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு! - எஸ்பியிடம் வழக்கறிஞர்கள் மனு - wife dead

கோவை: சாலை விபத்தில் மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது மது போதையில் வாகனம் இயக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.

coimbatore-doctor-ramesh-wife-accident-case
author img

By

Published : Jun 29, 2019, 9:12 PM IST

ஆனைக்கட்டி அடுத்த ஜம்புகண்டி பிரிவில் கடந்த 24ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சமூக ஆர்வலரும், மருத்துவருமான ரமேஷின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகள் படுகாயமடைந்தார். குடிபோதையில் வந்த நபரின் வாகனம் மோதியதில், இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.

விபத்தில் காயமடைந்த மகளை மருத்துவமனைக்குச் சென்று பார்க்காமல் மனைவி சடலத்துடன், ரோட்டில் அமர்ந்து அப்பகுதியில் இருக்கும் அரசு மதுபானக் கடையை அப்புறப்படுத்தக்கோரி போராட்டம் நடத்தினார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் விபத்துத் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று மருத்துவர் ரமேஷ் சார்பில் வழக்கறிஞர்கள், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் குமாரிடம் மனு அளித்துள்ளனர். அதில் விபத்து ஏற்பட்ட சம்பவத்தின்போது வாகனத்தை ஓட்டி வந்த பாலாஜி, அசோக் ஆகியோர் இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும், ஆனால் முதல் தகவல் அறிக்கையில் குடிபோதையில் விபத்து ஏற்பட்டதற்கான பிரிவுகள் சேர்க்கப் படவில்லை என தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை ஓட்டிவந்த பாலாஜி குடிபோதையில் இருந்தது கேரளாவில் இருக்கும் கோட்டத்துரா மருத்துவமனை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடன் வாகனத்தில் வந்த அசோக் குடிபோதையில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் பதிவேடுகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மருத்துவர் மனைவி கொலை வழக்கு வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், "மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து, மது போதையில் விபத்து ஏற்படுத்துதல் பிரிவைச் சேர்த்து, உடனடியாக இருவர் மீதும் கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்", என்றனர்.

Intro:கோவை ஆனைகட்டி பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா உயிரிழந்த விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது மது போதையில் வாகனம் இயக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய கோரி வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு..

Body:கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அடுத்த ஜம்பு கண்டி பிரிவில் கடந்த 24 ஆம் தேதி இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதி ஏற்பட்ட விபத்தில் சமூக ஆர்வலரும்,மருத்துவருமான ரமேஷின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று மருத்துவர் ரமேஷ் சார்பில் வழக்கறிஞர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் குமாரிடம் மனு அளித்துள்ளனர் அதில் விபத்து ஏற்பட்ட சம்பவத்தின்போது வாகனத்தை ஓட்டி வந்த பாலாஜி மற்றும் அசோக் ஆகியோர் இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும் ஆனால் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குடிபோதையில் விபத்து ஏற்பட்டதற்கான பிரிவுகள் சேர்க்கப் படவில்லை என தெரிவித்துள்ளனர் மேலும் வாகனத்தை ஓட்டிவந்த பாலாஜி குடிபோதையில் இருந்தது கேரளாவில் இருக்கும் கோட்டத்துரா மருத்துவமனை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடன் வாகனத்தில் வந்த அசோக் குடிபோதையில் இருந்தது கோவை அரசு மருத்துவமனையில் பதிவேடுகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்து தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து மது போதையில் விபத்து ஏற்படுத்துதல் பிரிவை சேர்ப்பதாகவும், உடனடியாக இருவர் மீதும் கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர் கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யும்போது விபத்தை ஏற்படுத்திய அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்தனர்.. வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.