கோவை கொடிசியா வளாகத்தில் கோப்மா, டேக்ட், சேம்பர் ஆப் காமர்ஸ் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கொடிசியாவின் தலைவர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், "கரோனா பரவாமல் இருப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது தொழில்துறையினர் வரவேற்கிறோம். வருடங்கள் முடிந்த பின்பு வைரஸ் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தபின்பு தான் தொழில்களைத் தொடங்க உள்ளோம். சிறு, குறு தொழில்களை பொறுத்தவரை எந்த ஒரு அறிவிப்பும் மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அவசரகால கூடுதல் கடன் உதவியாக ஏற்கனவே நடப்பு மூலதனத்தில் உள்ளதில் 25 சதவீதம் கூடுதலாக அதிகரிக்கவேண்டும். அந்த கடனுதவியை அடிப்படை ஆண்டாக 2018, 2019ஐ வங்கிகள் கணக்கில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அனைத்து வங்கி கடன்களையும் ஓராண்டு காலம் கழித்து செலுத்தும் வகையில் நிவாரணம் அழித்திட வேண்டும்.
இ.எஸ்.ஐ, பி.எப் பில் உள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய்யை தொழிலாளர்களின் பணி நிவர்த்திக்காக மத்திய அரசாங்கம் உபயோகப்படுத்த அளித்திட வேண்டும். தற்பொழுது வரை தொழிலாளர்கள் வங்கிகளில் கடன் வாங்கும் பொழுது பத்திர செலவு 30,000 வரை ஆகிறது. எனவே அடுத்து வாங்கப்படும் தொழில் கடன்களுக்கு கட்டணமில்லா பத்திரப்பதிவு செய்ய வேண்டும்", என்றார்