கரோனா தொற்றின் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் இன்று முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கின.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் வகுப்புகள் நடைபெற்றன.
அரசு அறிவுறுத்திய, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் முதற்கட்டமாக, முதுநிலை அறிவியல் பாடப்பிரிவு முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.