கோவை: இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக, உத்தரப்பிரதேச அரசு தங்கள் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. முன்னதாக, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.
'மண் காப்போம்' இயக்கம் சார்பில் லக்னோவில் நேற்று(ஜூன் 7) நடந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், அம்மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சர் சூர்யா பிரதாப் சாஹி, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஸ் பிண்டால், உள்ளிட்டப் பல்வேறு அரசு உயர் அலுவலர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.
விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், மனித குல வரலாற்றில் தற்போது முதல்முறையாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் 'மண் அழிவு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும்; மண் வளம் இழப்பதன் இக்கட்டான நிலையையும் சுட்டிகாட்டி பேசினார். மேலும், ’இதை நம்மால் சரி செய்ய முடியும்; மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் பாரதம் உலகிற்கு முன்னோடியாக தலைமை வகிக்க வேண்டும். ஏனென்றால், நாம் பாரதத்தில் மண்ணை ‘தாய் மண்’ என அழைக்கிறோம். குறிப்பாக, அதிக விவசாய நிலப்பரப்பை கொண்டுள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் இந்த முயற்சியில் தலைமை வகிக்க வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடூரச் சம்பவம் - தீவிர விசாரணையில் அலுவலர்கள்!