ETV Bharat / city

செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு செக்

கோயம்புத்தூர்: செங்கல் சூளை உரிமையாளர்கள் உரிய ஜிஎஸ்டி வரி செலுத்துவதில்லை என்று புகார் எழுந்தநிலையில், அவர்களது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

செங்கல் சூளை உரிமையாளர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

author img

By

Published : Sep 17, 2020, 7:18 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சின்ன தடாகம், பெரிய தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் செங்கற்களுக்கு உரிய ஜிஎஸ்டி வரி செலுத்துவதில்லை என்று புகார் எழுந்துள்ளன.

இதனையடுத்து இன்று (செப்டம்பர் 17) காலை 6 மணி முதல் சோமனூர், சின்ன தடாகம், பெரிய தடாகம், சாய்பாபா கோயில் உள்ளிட்ட 25 இடங்களில் ஜிஎஸ்டி துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து செங்கல் சூளை உரிமையாளர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

செங்கல் சூளை உரிமையாளர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

இந்த சோதனையில் முறைகேடுகளில் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர்களிடம் உரிய அபராதம் விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி வரி துறையினர் தெரிவிக்கின்றனர். தடாகம் பகுதிகளில் அனுமதியின்றி பல செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே புகார் எழுந்து வரும் நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வரி செலுத்தி விட்டீர்களா! ஒரு லட்சத்துக்கு மேல் எந்த பொருள்கள் வாங்கினாலும் செக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.