கோவை: அன்னூரில் கோவை வடக்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்டத் தலைவர் ஜெகநாதன், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் கனகசபாபதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில்,
1. மத்திய அரசு, தமிழ்நாட்டின் மேற்கு மண்டல மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும், நிர்வாக ரீதியாக மாநில மறுசீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என்ற புதிய மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
2. மத்திய அரசு இலவசமாக வழங்கும் கரோனா தடுப்பூசிகளை, அனைவருக்கும் உரிய அளவில் பகிர்ந்து அளிக்காமல் சென்னை மண்டலத்திற்கு அதிகமாகவும், கோவை மண்டலத்திற்கு குறைவாகவும் ஒதுக்கீடுசெய்வதைக் கண்டிக்கிறோம்.
3. ஜெய்ஹிந்த் என்ற நமது தேசபக்தி முழக்கத்தை திமுக ஆதரவு எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில் அவமதித்ததற்கும், அதற்குத் துணையாக உள்ள தமிழ்நாடு அரசுக்கும் கண்டனங்கள்.
4. தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க ஒரு கிலோ கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை 150 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.