கோயம்புத்தூர்: தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கோட்டூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (செப்.11) பொள்ளாச்சி வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.கவினர் பல்வேறு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். அந்த வகையில் கோவை ரோடு காந்தி சிலை அருகே பெரிய மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த தகவலை அறிந்த போலீசார் அங்கு விரைந்து உரிய அனுமதி பெறாமல் மேடை அமைக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். அப்போது அங்கிருந்து பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான அனுமதி பெறாததால் மேடை அமைக்க, அனுமதிக்க முடியாது என்று போலீசார் உறுதியாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்”