கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 455 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 58.92 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு எனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட இலவச அம்மா அவசர ஊர்தி சேவைத் திட்டமும் தொடங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியினை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பயோமெட்ரிக் வாக்கு இயந்திரம் - பள்ளி மாணவர்கள் சாதனை!
பின்னர் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.