கோவை மதுக்கரை மோகன்நகரில் 200-க்கு மேற்பட்ட வீடுகளும், சிறு குறு தொழிற்சாலைகளும் உள்ளன. இப்பகுதியில் நேற்று (ஜூன்8) நள்ளிரவு நேரத்தில் வட மாநில இளைஞர் ஒருவர் உலா வந்தது, வீடு ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில், நள்ளிரவு நேரத்தில் ஒரு சில வீடுகளை வெளியே இருந்தவாறு கண்காணிக்கும் அவர், ஒரு வீட்டிற்குள் கேட்டை திறந்து உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளார். நாய் தொடர்ந்து குறைத்ததால் அங்கிருந்து செல்கிறார். இதேபோல, பல வீடுகளை நோட்டமிட்டவாறு அவர் திரிவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டறிந்து, போலீஸார் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அவர் மனநலம்பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அரசு மீது ஊழல் புகார் சுமத்தும் அண்ணாமலை... ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் - வேல்முருகன்