ETV Bharat / city

கோவை மேயர் இல்லம் ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு: அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் - மேயர் இல்லத்திற்கு ஒரு கோடி மதிப்பில் சுண்ணாம்பு எதற்கு

கோவை மேயர் இல்லம் ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.

அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்.
அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்.
author img

By

Published : Jun 30, 2022, 9:50 PM IST

கோயம்புத்தூர்: மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி நிதி முறையாக பயன்படுத்தபடுவதில்லை எனவும் நிதி நெருக்கடி இருக்கும் நிலையில் மேயர் இல்லத்தை ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைப்பதை கண்டித்தும் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் பதாகைகளுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மாநகராட்சி பொது நிதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படுவதில்லை எனவும், அதே வேளையில் மேயர் வீட்டை ஆடம்பரமாக பங்களாவாக மாற்ற ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி மேயர் மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. ரிசர்வ் சைட்டுகளை வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என்று விதிகள் இருக்கும் நிலையில் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் ரிசர்வ் சைட்டுகளை தனிநபருக்கு கொடுக்கின்றனர். இது தவறான நடவடிக்கை. திமுக மேயர் கல்பனா வந்தபின் எந்த பணிகளும் நடைபெறவில்லை. மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இதையும் படிங்க: திமுகவை தோற்கடிப்பதற்கு எந்த தியாகமும் செய்யத் தயார்!' - டிடிவி தினகரன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.