ETV Bharat / city

மனைவியிடம் தவறாக நடந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் ஆர்ப்பாட்டம் - ஆட்சியர் அலுவலகம்

பொள்ளாச்சியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்த திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் செல்போன் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

செல்போன் கோபுரத்தின் மீறி ஆர்ப்பாட்டம்
செல்போன் கோபுரத்தின் மீறி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 14, 2021, 10:03 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்தவர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயனை.

இவரது கணவர் நாகராஜ், திமுகவின் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் செயலாளராக உள்ளார். இவர், அப்பகுதியிலுள்ள நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயன்ற பெண்

இதனால், மனமுடைந்த அப்பெண் இன்று (ஆக.14) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், பெண்ணை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் மணமுடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஜஸ்டின் சுந்தர்சிங், அப்பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் கீழே வரும்படி கூறினர்.

அப்போது, தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கோடு பேசிய திமுக ஊராட்சிமன்ற தலைவரின், கணவர் நாகராஜை கைது செய்யக்கோரியும், தனக்கு நீதி வேண்டும் என்றும் கோபுரத்தின் மீது நின்றவாறே கூறினார்.

பாலியல் தொல்லை

பின்னர், பொதுமக்கள் சமாதானம் செய்ததையடுத்து அவர் போபுரத்திலிருந்து கீழே இறங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜஸ்டின் சுந்தர்சிங், “ஊராட்சிமன்ற தலைவரின் கணவரை கைது செய்து தனக்கு நியாயம் வழங்க வேண்டும். தன்னுடைய மனைவிக்கு நாகராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது, தன்னிடம் சொல்லாமலேயே மாவட்ட ஆட்சியரை சந்தித்துள்ளார். அவருக்கு ஏதாவது நேர்ந்தால் என்னுடைய குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை உள்ளது” என வேதனை தெரிவித்தார்.

செல்போன் கோபுரத்தின் மீறி ஆர்ப்பாட்டம்

திமுக நிர்வாகியின் அராஜக போக்கை அங்குள்ள பொதுமக்கள் கண்டித்தனர். ஆனால், காவல் துறையிடம் இருந்து எந்த ஒரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைப்பட தக்க விஷயமாகவே உள்ளது.

ஆளுங்கட்சிக்கு துணையாக காவல் துறையினர் பணியாற்றுவதை பொதுமக்கள் வெகுவாக கண்டித்தனர். பொதுமக்களுடைய வேண்டுகோளை ஏற்றுத்தான் ஜஸ்டின் சுந்தர்சிங் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.