ETV Bharat / city

ஊராட்சி வார்டு தேர்தல்: மூதாட்டி கள்ள ஓட்டு போட்டதாக சர்ச்சை; திமுக - அதிமுக மோதல்

கோவை அருகே மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் கள்ள ஓட்டு போட்ட 85 வயது மூதாட்டியிடம் அன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஊராட்சி வார்டு தேர்தல், coimbatore annur union election, கோயம்புத்தூரில் கள்ள ஓட்டு, கோயம்புத்தூர், coimbatore
ஊராட்சி வார்டு தேர்தல்
author img

By

Published : Oct 10, 2021, 10:19 AM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி வார்டு எண் மூன்றில், மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தல் இன்று (அக்.9) நடைபெற்றது.

இதில், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அல்லிக்காரன்பாளையம், ஒட்டர்பாளையம், நல்லி செட்டிபாளையம், கரியாம்பாளையம், பொகளூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், கரியாம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது மாலை 5.30 மணியளவில் ஜெயமணி என்ற 85 வயது மூதாட்டி வாக்குச்சாவடிக்குள் வந்துள்ளார்.

அவர், தனது வாக்கை செலுத்தி விட்டு வெளியே வரும் போது அங்கிருந்த அதிமுக முகவர்கள், மூதாட்டி ஜெயமணி, பொன்னம்மாள் என்ற பெயரில் கள்ள ஓட்டு செலுத்தியதாக குற்றஞ்சாட்டினர்.

கள்ள ஓட்டு விவகாரத்தில் திமுக - அதிமுக மோதல்

திமுக - அதிமுக மோதல்

இதனையடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அதிமுகவினரை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது, திமுக நிர்வாகிகளும் அங்கு வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பின்னர், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர், காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் முருகேசன் என்பவர் மூதாட்டி ஜெயமணி அழைத்து வந்ததும், அவர் பொன்னம்மாள் என்பவருடைய வாக்கை செலுத்தியதும் தெரியவந்தது.

அவருக்கு வாக்குரிமையே இல்லை

மேலும், ஜெயமணி அதே பகுதியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு அங்கு வாக்குரிமை இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தேர்தல் முகவர்களிடமிருந்து புகாரை வாங்கிய அன்னூர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சுயேச்சை வேட்பாளர் தயாரித்த உணவில் மண் அள்ளிப்போட்ட போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.