கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(25). இவர் கட்டட தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று( செப்டம்பர் 21) தினேஷ் வந்துள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டில் இருந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்த பெற்றோர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் தினேஷை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த தினேஷ், மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கட்டட தொழிலாளி கைது - சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
கோயம்புத்தூர்: 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
![4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கட்டட தொழிலாளி கைது கைது செய்யப்பட்ட கட்டிட தொழிலாளி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:34:24:1600765464-tn-cbe-03-posco-arrest-script-7208104-22092020133746-2209f-1600762066-891.jpg?imwidth=3840)