கோவை: தாராபுரத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர், அகிலன். இவரது தம்பி மதன்குமார் என்பவர், கர்ப்பிணியாக உள்ள தன் மனைவியை ஆனைமலை அருகே உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்று அடிக்கடி பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று (மே 16) தன் மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
உடன் அவரது அண்ணன் அகிலனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த மோகன்குமார் மற்றும் அவரது நண்பர்களான மலரவன், மணிகண்டன், ஜெகதீசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்தனர்.
3 இளைஞர்கள் உயிரிழந்த சோகம்: அப்போது, வேட்டைக்காரன்புதூரில் இருந்து காளியாபுரம் நோக்கி செல்லும் வழியில் அகிலன் சென்ற இருசக்கர வாகனமும் மோகன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வந்த இருசக்கர வாகனமும் காளியாபுரம் பிரிவில் நேருக்கு நேர் மோதியது. இதில், 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அகிலன், மதன்குமார், மோகன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போயினர்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மலரவன், மணிகண்டன், ஜெகதீஸ் ஆகியோரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஆபத்தான நிலையில் உள்ள ஜெகதீஷ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இறந்துபோன 3 பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்காக வேட்டைக்காரன் புதூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க: இருசக்கர வாகனத்தில் செல்லுவோர் இது விபத்துகளில் சிக்கிக்கொண்டு தங்களின் இன்னுயிரை இழக்காமல் இருக்க மிதமான வேகத்தில் சாலை விதிமுறைகளைப்பின்பற்றி பயணம் செய்தால் விபத்துகளையும் அதனூடாக வரும் பாதிப்புகளையும் தவிர்க்கலாம். எனவே, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் ஆகியவற்றை கட்டாயமாக அணிய வேண்டும் மறவாதீர்கள்.
இதையும் படிங்க: கெட்டுப்போன பப்ஸ் விற்பனை - பேக்கரி ஊழியர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பெண்கள்...