கோவை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆதியோகி முன்பு நடந்த சிறப்பு சத்சங்கத்தில் ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், "மனிதர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதுதான் உலகில் நாம் தற்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. அதன்மூலம் மட்டுமே விழிப்புணர்வான உலகை உருவாக்க முடியும்.
நாம் உலகில் விழிப்புணர்வு அலையை உருவாக்கிவிட்டால், பூமியைப் பாதுகாப்பது என்பது இயற்கையான எதிர்வினையாக நிகழ்ந்துவிடும். உலகை தற்போது இருப்பதைவிட சிறப்பானதாக ஆக்க நாம் உறுதி ஏற்போம். காலம் என்பது எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது.
சுதந்திர வாழ்வை நோக்கியா அல்லது கட்டுப்பாடுகளுக்குள்ளா?
அது ஓடிக்கொண்டே இருக்கும். காலத்துடன் சேர்ந்து வாழ்க்கையும் ஓடிக்கொண்டே இருக்கும். ஆகவே, அதன் மதிப்பை உணர்ந்து ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக மாற்ற முயற்சி எடுங்கள். ஒவ்வொரு நாளையும் புத்தாண்டின் முதல் நாளாக நீங்கள் பார்க்க வேண்டும்.
364 நாள்களை விழிப்புணர்வின்றி ஏனோதானோ என்று கழித்துவிட்டு ஒரே ஒருநாள் தீர்மானம் எடுத்துக் கொண்டாடுவதால் எந்தப் பயனும் விளையாது. வெறும் தீர்மானங்களை எடுப்பதைவிட நாள்தோறும் நீங்கள் ஒரு உயிராக என்ன செய்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.
எல்லா கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடும் வகையில் சுதந்திரமான வாழ்வை நோக்கி நகர்கிறீர்களா அல்லது மேலும் மேலும் அதிகப்படியான கட்டுப்பாடுகளுக்குள் சிக்கப்போகிறீர்களா என்பதை கவனியுங்கள். அதற்கேற்ப உங்களது செயலை விழிப்புணர்வாகச் செய்ய பழகுங்கள்" என்றார்.
மண்வளப் பாதுகாப்பு
Conscious Planet என்னும் இவ்வியக்கம் மண் வளப் பாதுகாப்பு - சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக வலுவான கொள்கைகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பன்னாட்டு நாடுகளுக்கு எடுத்துக்காட்ட உள்ளதாகவும் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வானிலை ஆய்வு மைய செயல்பாட்டை மேம்படுத்துக - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்