ETV Bharat / city

மரணம் விளைவித்தல் இல்லை! கொலைக்கு நிகரான மரணத்தை ஏற்படுத்துதல்!

கோயம்பத்தூர்: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமான தடுப்புச்சுவரை கட்டிய தொழிலதிபர் சிவசுப்பிரமணியன் மீது போடப்பட்ட வழக்கு வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

17 killed compound issue in covai  covai compound issue  coimbatore compound issue  கோவை சுவர் விவகாரம்  17 பேரை கொன்ற சுவர்  தொழிலதிபர் சிவசுப்பிரமணியம்
தொழிலதிபர் சிவசுப்பிரமணியம்
author img

By

Published : Dec 4, 2019, 1:52 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொழிலதிபர் சிவசுப்பிரமணியம் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த வீட்டின் உரிமையாளரான சிவசுப்பிரமணியத்தை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து நேற்று காலை சிவ சுப்பிரமணியத்தை மேட்டுப்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக கையாண்டு மரணம் விளைவித்தல் (304 ஏ) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இத்தருணத்தில் அப்பிரிவை மாற்றி கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல் (304_2) என்ற பிரிவு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழப்பு: வீட்டின் உரிமையாளர் அதிரடி கைது!

கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குப் பிரிவை மேட்டுப்பாளையம் காவல் துறையினர் மாற்றியுள்ளனர். இவ்வேளையில் அங்கு ஆபத்தான நிலையில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் முழுமையாக அகற்றப்பட வேண்டும் எனவும் அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

சுவர் இடிந்து விழுந்த 17 பேரின் உடல் ஒரே இடத்தில் தகனம்

Intro:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமான தடுப்புச்சுவரை கட்டிய தொழிலதிபர் சிவசுப்பிரமணியன் மீது போடப்பட்ட வழக்கு பிரிவு மாற்றம்..Body:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொழிலதிபர் சிவசுப்பிரமணியம் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர் இதற்கு காரணமான சிவ சுப்பிரமணியத்தை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனர் இதனையடுத்து நேற்று காலை சிவ சுப்பிரமணியத்தை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர் அவர்மீது அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் (304 ஏ) என்ற பிரிவு கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இந்நிலையில் அந்த பிரிவை மாற்றி கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல் (304_2) என்ற பிரிவு போடப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு பிரிவை மேட்டுப்பாளையம் போலீசார் மாற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு ஆபத்தான நிலையில் கட்டப்பட்ட தடுப்பு சுவர் முழுமையாக அகற்றப்பட வேண்டும் எனவும் அகற்றப் படாவிட்டால் போராட்டம் மேற்கொள்ளும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.