கோயம்புத்தூர்: யூனிசெஃப் என்ற சர்வதேச அமைப்பை போன்றே யுனிசெஃப் இண்டர்நேசனல் கவுன்சில் என்ற பெயரில் அமைப்பை தொடங்கி
சமூக நலனுக்காக தொடர்ந்து பணியாற்றும் தனிநபர்களுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரம் தந்து வருகின்றது. இந்நிலையில் சமூகத்தில் மக்கள் நன்மைக்காக பாடுபடுகின்ற தனி நபர்களை குறிவைத்து அவர்களுக்கு விருது தருவதாக கூறி மோசடி செய்த கோவையை சார்ந்த பிரபு என்பவர் லட்சக்கணக்கில் பணம் பறித்திருகின்றார்.
கோவைபுதூரில் வசித்து வரும் பிரபு இண்டர்நேசனல் யுனிசெஃப் கவுன்சில் என்ற அமைப்பினை நடத்தி வருகின்றார். சர்வதேச யுனிசெஃப்க்கும் இந்த அமைப்புக்கும் சம்மந்தமே இல்லையென்றாலும் தன்னை பெரிய அளவில் பொதுவெளியில் பிரபலபடுத்தியிருக்கின்றார் பிரபு. இதன் மூலமாக இவர் நடத்துகின்ற அமைப்பின் பேரில் தனிநபர்களுக்கு கெளரவ டாக்டர் படங்களை தந்து வருகின்றார்.
இந்த நிலையில் மருத்துவர்கள் தொழில் அதிபர்கள் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு குடியரசு தலைவர் ஜன சேவா புஸ்கர் விருது, முதல்வர், கவர்னர் மாளிகை சமுக சேவகர் விருதுகளை வாங்கி தருவதாக தெரிவித்து நன்கொடை பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் நன்கொடை என்ற பெயரில் பிரபு 15 லட்சத்திற்கான டி டி பெற்றிருக்கின்றார்.
பணத்தை பெற்றுக்கொண்டு விருதுகள் வழங்க தாமதமான நிலையில் நன்கொடை தந்தவர்கள் புரபுவிடம் சென்று விசாரித்து விருது விவரங்களை தர சொல்லியிருக்கின்றனர். பிரபு முன்னுக்கு பின் முரணாக பதில் தர சுதாரித்துக்கொண்டவர்கள் பிரபு மோசடி பேர்வழி என்பதனை அறிந்து குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு சென்ற 10க்கும் மேற்பட்டோர் சார்பாக வழக்கறிஞர் சலீம் இராஜா என்பவர் புகார் தந்திருக்கின்றார்.
புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் பிரபுவை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: 300 கிலோ பச்சைக்கடல் அட்டைகள் பறிமுதல்!