கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இதையடுத்து ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மாணவர்களிடையே கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு பள்ளியில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அதோ பகுதியில் உள்ள வேறொரு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோல திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பேரலை வரும் ஜனவரியில் தொடங்கும் என்று சுகாதாரத்துறை அலுவர்கள் தெரிவித்துவருகின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோபோல தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வரும் ஜனவரி முதல் விடுமுறை அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைவில் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஒமைக்ரான் அச்சுறுத்தல்: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்