கோவை: இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம்(23). இவரும் நண்பரும் (17 வயது) சரவணம்பட்டி பகுதியில் ராகுல் என்பவரின் இரு சக்கர வாகனத்தைத் திருடியதால் சரவணம்பட்டி காவல் துறையினரால் பிடிக்கப்பட்டனர்.
விசாரணையில் இருவரும் யூ-ட்யூப்பைப் பார்த்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இதே போன்று கோவை மாவட்டத்தில் சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் காவல்நிலையங்கள் ஆகியன உட்பட பல்வேறு காவல்நிலையங்களில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக இவர்கள் மீது 11 வழக்குப் பதிவுகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, 17 வயது சிறுவன் சிறார் நீதிவாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதன் பின், கைது செய்யப்பட்ட ஜீவானந்தம் பல்லடம் சிறையில் அடைக்கப்பட்டார். திருடப்பட்ட 11 வாகனங்களில் 7 வாகனங்களின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஐஐடியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்கும் என்பது வரவேற்புக்குரியது' - சென்னை ஐஐடி இயக்குநர்