ETV Bharat / city

வாசனை திரவியம், ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு - கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ்

திருவள்ளூர் மாவட்டத்தில் வாசனை திரவியம் மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் அரசு உதவி செய்யுமென தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு
author img

By

Published : Apr 22, 2022, 7:38 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.22) கேள்வி நேரத்தின்போது பேசிய, கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜ், திருவள்ளூர் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விவசாயமும், பூ விவசாயமும் அதிகமாக இருப்பதால் மரவள்ளிக்கிழங்கை வைத்து ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும், பூக்களை வைத்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சி வேகமாக இருப்பதாகவும் பல தொழிற்சாலைகள் அந்த பகுதியில் அமைந்திருப்பதால், தனியார் நிறுவனங்கள் வாசனை திரவியம் மற்றும் ஜவ்வரிசி தயார் செய்யும் தொழிற்சாலை அமைக்க முன்வந்தால் அரசு நிச்சயம் உடன் இருந்து உதவி செய்யும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: வாசனை திரவிய ஆலைகள் மூடல்: 2 டன் பூக்கள் வீண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.