சென்னை: சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(29). கடந்த 2015ஆம் ஆண்டு இணையவழி திருமணத் தகவல் நிலையம் (மேட்ரிமமோனியல்) மூலம் ராஜசேகருக்கும், ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின்போது வரதட்சணையாக, 50 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கமும் பெண் வீட்டார் வழங்கியுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பல வருடங்கள் ராஜசேகரன் தனது மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக்கொள்வதில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் வற்புறுத்தலைத் தொடர்ந்து ஒரே ஒருமுறை ராஜசேகர் தன் மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜசேகரின் தலையில் வைத்திருந்த விக் கழன்று விழுந்துள்ளது. இதனால் ராஜசேகருக்கு வழுக்கை தலை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தலையில் முடி இருப்பது போல் விக் வைத்து கொண்டு மேட்ரிமோனியில் புகைப்படத்தை பதிவிட்டு ராஜசேகர் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் அவரது மனைவிக்கு தெரியவந்தது.
வரதட்சணையாக வாங்கிய 50 சவரன் நகைகளை ராஜசேகர் செலவு செய்துவிட்டு, வங்கியில் இருப்பதாக கூறி பொய்யாக கூறி வந்துள்ளார். இவை அனைத்தும் மனைவிக்கு தெரிந்தவுடன், ராஜசேகர் அவரை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தாம்பரத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து!