இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 'அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் எதிரிகள், நம்பிக்கைத்துரோகிகள் ஆகியோரின் எண்ணத்தில் மண் அள்ளிபோடப்பட்டுள்ளது' என்றார்.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி: முழு கள நிலவரங்களின் தொகுப்பு! - Who is the next AIADMK Chief Ministerial candidate ops
11:38 October 07
'ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி': ஜெயக்குமார்
11:32 October 07
அதிமுக ஒரே கட்சி: வைத்திலிங்கம் கருத்து
எம்ஜிஆர் நினைவிடத்தில் இருந்து வெளியே வந்த அதிமுக மூத்த நிர்வாகி வைத்திலிங்கம், அதிமுக ஒரே கட்சி என்று தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையனுக்கு வழிகாட்டுதல் குழுவில் இடம் இல்லையே என்ற கேள்வியை செய்தியாளர்கள் அவரிடம் முன் வைத்தனர். அப்போது பதில் அளித்த வைத்திலிங்கம், ' அவருக்குப் பல்வேறு பொறுப்புகள் காத்துக்கிடக்கின்றன' எனத் தெரிவித்தார்.
11:22 October 07
செய்தியாளர்களைச் சந்திக்காத ஈபிஎஸ், ஓபிஎஸ்
முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியபின் தத்தமது காரில் புறப்பட்டுச் சென்றனர்.
11:13 October 07
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்
11:10 October 07
மலர்த்தூவி அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்., ஈபிஎஸ்
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
11:08 October 07
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 'நாளை நமதே' வாசகம்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 'நாளை நமதே' என்ற வாசகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
10:40 October 07
ஜெயலலிதா நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த கிளம்பிய ஈபிஎஸ், ஓபிஎஸ்
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக தொண்டர்கள் புறப்பட்டனர்.
10:08 October 07
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி!
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
10:04 October 07
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

09:59 October 07
அதிமுக வழிகாட்டுதல் குழுவை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,ஜெயக்குமார்,சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 11 பேரை முதலமைச்சர் அறிவித்தார்.
09:47 October 07
வழிகாட்டுதல் குழுவை அறிவிக்கிறார் ஈபிஎஸ்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் வழிகாட்டுதல் குழுவை ஈபிஎஸ் அறிவிக்கிறார்.
09:42 October 07
உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்
அதிமுக தொண்டர்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
09:40 October 07
அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஈபிஎஸ்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்தார்.
09:36 October 07
அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ்
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகைதந்தார்.
09:29 October 07
ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் அதிமுக தலைமை அலுவலகம் புறப்பாடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தத்தமது இல்லங்களில் இருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டனர்
09:26 October 07
வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறப்போவது யார்?
அதிமுகவின் 11பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் ஓபிஎஸ் தரப்பில் 5 பேர், ஈபிஎஸ் தரப்பில் 6 பேர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
09:23 October 07
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் செய்தியாளர் சந்திப்பு?
முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
09:00 October 07
08:57 October 07
முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு விரையில்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பிறகு முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
08:36 October 07
காலை 9:05 மணிக்குப் புறப்படும் முதலமைச்சர்
காலை 9:05 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருக்கிறார்.
08:27 October 07
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து காலை 9.30 மணியளவில் அறிவிப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.