பாமக தலைமை, பொதுக்குழுவை ஒத்திவைத்து மறைமுகப் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. பாமக இறுதி செய்யப்போகும் கூட்டணி எது, மாற்றம் முன்னேற்றம் முடிவைக் கைவிட்டுவிட்டதா என்ற பேச்சும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நேரடி அதிகாரம் சாத்தியம் இல்லை என்ற நிலையில் கூட்டணி தொடர்பாக, எந்த ஒரு முடிவையும் இறுதி செய்யாத சூழலில் தொடர் இழுபறி நீடிக்கிறது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக உத்ரவாதம் அளிக்கும் கட்சி உடன் மட்டுமே கூட்டணி என்று வெளிப்படையாக அறிவித்து, அது தொடர்பாக விவாதிக்க கட்சியின் நிர்வாகக்குழு நேற்று(ஜனவரி 25) காணொலி காட்சி வாயிலாக நடைபெற இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திரைக்குப் பின்னால் இடப்பங்கீடு தொடர்பான உரையாடல் தீவிரம் அடைந்துள்ளதென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த முறை தனித்துப்போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவிய நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியை முன்னுறுத்தி தேர்தலை சந்திக்கும் முடிவை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்ற விமர்சனங்களும் எழுகின்றன.
1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாமக 1991ஆம் ஆண்டு 194 இடங்களில் தனித்து நின்று ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.1996ஆம் ஆண்டு திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பாமக தனித்து நின்று 4 இடங்களில் வென்றது. கடைசியாக, 2016ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் தனித்து நின்று 5.4% வாக்குகளை பெற்றது.
கூட்டணி சவாரி:
1996-க்குப் பிறகு, பாமக கூட்டணியை வைத்தே தேர்தலைச் சந்தித்து வருகிறது. கூடுதல் இடங்களைத் தரும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை பாமக விரும்புகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து 27 இடங்களைப் பெற்று 20 இடங்களில் வெற்றி பெற்றது. 2006இல் திமுக கூட்டணியில் இடம்பெற்று 31 இடங்களில் 18 இடங்களை கையகப்படுத்தியது. ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணியில் 7 இடங்களைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் வரும் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவதுடன் இடஒதுக்கீடு தொடர்பான உத்ரவாதம் தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக கூறிவருகிறது.
'நிர்வாகக்குழு கூட்டம் நடக்கும் ஜனவரி 31ஆம் தேதி கூட்டணி குறித்து விவாதிக்கப்படும்; பாமக தலைவர் ராமதாஸின் முடிவே இறுதியானது. இது குறித்து தற்போது எதுவும் பேச முடியாது. முன்னரே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது போல இட ஒதுக்கீடு குறித்த உத்ரவாதம் அளிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி குறித்து பரீசிலிக்கப்படும்,” என இது குறித்துப் பேசிய பாமக செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதி தெரிவிக்கிறார்.
தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறும் கட்சி என்ற அடையாளம், பாமக மீது ஆழப் பதிந்துள்ளது. இருப்பினும், அதன் வாக்கு சதவீதம் பெரிய அளவில் வளரவில்லை.
மேலும் இது குறித்துப் பேசிய லோக் நீதி அமைப்பின் தமிழ்நாடு பொறுப்பாளர் ராமஜெயம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணியையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் பாமகவிற்கு உள்ளன என்று கூறுகிறார். ’கடந்த 3 தேர்தல்களிலும் தனித்து நின்றோ கூட்டணியாக போட்டியிட்டோ 5,6 விழுக்காடு வாக்குகளை பாமக பெற்றுள்ளது. கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்காகவே தொடர்ந்து காலதாமதம் செய்கின்றனர். இடஒதுக்கீடு குறித்த உத்ரவாதம் அளிப்பது சாத்தியம் இல்லாத ஒன்று, அரசியல் பேரத்திற்கான காய் நகர்த்தல் என்பதே யதார்த்தம். இவர்களுக்குக் கொடுத்தால் மற்ற சாதிகளில் இட ஒதுக்கீடு கோருவார்கள். எனவே, அது குறித்து எந்த ஒரு உத்ரவாதத்தையும் அதிமுக அளிக்காது’ என அவர் உறுதியாக தெரிவிக்கிறார்.
பிரதான கட்சிகள் பரப்புரையைத் தொடங்கி உள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த பின்பே பரப்புரை என்பதில் உறுதியாக இருக்கின்றன. கூட்டணியை இறுதி செய்த பின்பே தேர்தல் களம் களைகட்டும். பாமகவின் முடிவிற்காக அதிமுக விழிமேல் வழி வைத்துக் காத்து இருக்கிறது. இறங்கி வரப்போவது யார் என்பது விரைவில் தெரியும்.
பாமகவின் தேர்தல் கூட்டணி கணக்கு என்ன? - alliance talk
கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாமக இன்னும் முடிவெடுக்காத நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி இன்னும் இறுதி வடிவம் பெறாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.